CCE Asst 1.0 மென்பொருளை இயங்கும் முறை

இம்மென்பொருளை பயன்படுத்த தொடங்கும் முன்பு மாணவ மாணவியர் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும், இம்மென்பொருள் மாணவர்கள் குறித்த விவரங்களை தனியாகவும், அவர்கள் படிக்கும் வகுப்புக்கள் குறித்த விவரங்களைத் தனியாகவும் பராமரிக்கும்,
     இதன் மூலம் கல்வியாண்டு முடிவில் மேல் வகுப்புக்களுக்கு செல்லும் போது பெரிய அளவில் முயற்சிகள் ஏதுமின்றி எளிமையாக வகுப்பு மாற்றங்களை செய்துவிட முடியும்,
     இம் மென்பொருள் கல்வியாண்டுகள், பருவங்கள் குறித்த விவரங்களையும் பராமரிக்க உதவுவதால், பல ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட குறிப்பிட்ட மாணவனின் கல்வி நிலை முன்னேற்றங்களை கல்வியாண்டு, பருவம் வாரியாக பார்வையிடவும் அச்செடுக்கவும் முடியும். ஆதாவது இந்த ஆண்டில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர் எட்டாம் வகுப்பு முடிக்கும் போது அவருடைய எட்டு ஆண்டுகளுக்கான Report ஐக் கூட பெற இயலும்.
பாடத்தலைப்புக்களை ஆசிரியர் கூடுதலாக சேர்க்கவும், திருத்தம் செய்யவும், நீக்கம் செய்யவும் முடியும். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பாடத்திற்கு FA(a)  செயல்பாடுகளை முன்கூட்டியே தீர்மானித்து இம்மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு பதிவேற்றம் செய்து கொண்ட பின்பு, அந்தச் செயல்பாடுகளை அடிப்படிடையாகக் கொண்டு, குறிப்பிட்ட பாடத்திற்கு மாணவருக்கு எந்த FA(a)  செயல்பாடுகளை ஒதுக்கீடு செய்து தரப்போகிறோம் என்பதை இம்மென்பொருளில் உள்ள FA(a) செயல்பாடுகளை ஒதுக்கீடு செய்தல் என்ற திரையின் மூலமாக செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த தாளை உடனடியாக பதிவேட்டில் சேர்த்து விடும் போது, தற்போது நடத்தும் பாடம் வரையிலான CCE FA(a) பதிவேடு புதுபிக்கப்பட்டுவிம். மேலும் எந்த மாணவருக்கு எந்த செயல்பாடு என்பது வரை முன்கூட்டியே தீர்மானித்து விட்டு வகுப்பறைக்குச் செல்லும் போது ஆசிரியர் பணி எளிமையாக அமையும், அத்தோடு வகுப்பறைச் செயல்பாடுகள் மாணவர், ஆசிரியர் என இரு தரப்பிற்கும் திருப்திகரமாக அமையும். FA(a) செயல்பாடுகளுக்கு உரிய மதிப்பெண்களை தாளில் பதிவு செய்து பின்னர், நேரம் கிடைக்கும் போது கணிணியில் பதிவு செய்து விடலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மதிப்பிடப்பட்ட FA(a)  செயல்பாடுகளை தொகுத்து உரிய முறையில் FA(a) செயல்பாடுகளுக்கு  இறுதி தரம் வழங்குவதை மென்பொருள் செய்துவிடும்.
இதே முறையில் FA(b) செயல்பாடுகளை தீர்மானித்தல்(அ) வரையறுத்தல் (அ) தயாரித்தல் , பகிர்தல், மதிப்பிடல் போன்ற வேலைகளை ஆசிரியர் எளிமையாக மென்பொருளை பயன்படுத்தி மிக எளிமையாக செய்து விட முடியும்.
FA(a), FA(b) செயல்பாடுகளை ஒவ்வொரு பாடத்திற்கும் ஓரேயொரு முறை தயாரித்து மென்பொருளில் பதிவேற்றிவிட்டால் போதும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் செயல்பாடுகளை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தல், மதிப்பிடல் போன்ற வேலைகளை மட்டும் செய்து பதிவேடுகளை தயாரித்து விடலாம். இதனால் ஆசிரியர்கள் பதிவேடுகளை எழுதுவதிலும், புதுப்பிப்பதிலும் பெரும்பான்மையான நேரத்தை செலவிடுவதைத் தவிர்த்து வகுப்பறை செயல்பாடுகளில் கவனம் செலுத்த இயலும்.
கல்வி இணைச் செயல்பாடுகள் மதிப்பீடும் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டள்ளது. DTERT நிறுவனம் ஒவ்வொரு தலைப்பிற்கும் மதிப்பிட வேண்டிய துணைக் கூறுகளைக் வகுத்துள்ளது.
மென்பொருளானது ஒவ்வொரு துணைக் கூறுக்கும் அளிக்கப்படும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு அத்தலைப்பிற்கான மாணவனின் மதிப்பெண்களையும், தரத்தையும் தீர்மானித்து விடும். எனவே ஆசிரியர் மென்பொருளால் பட்டியலிடப்படும் துணைக்கூறுகளை (பண்புகளை) யும், மாணவனின் பெயரையும் பார்த்து அந்தப் பண்பிற்கு அந்த மாணவனிற்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம் எனத் தீர்மானித்து மதிப்பெண்களை அளித்தால் போதும். இவ்வாறே அனைத்து பண்புகளுக்குமான மதிப்பெண்களை அளித்து விட்டால் இறுதி அறிக்கையை மென்பொருள் தானே தயாரித்து விடும்.
தொகுத்தறிவுத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய தனித்திரை உள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட FA(a). FA(b). SA மதிப்பெண்களைக் கொண்டு பருவ இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுவிடும்.
CCE பதிவேடுகள் மட்டுமின்றி அவ்வப்போது அதிகாரிகள், அலுவலர்களால் கோரப்படும் புள்ளி விவரங்களையும் Query Builder என்ற வசதி மூலம் எடுத்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment