CCE Asst 1.0 மென்பொருள் பற்றிய அடிப்படை தகவல்கள்


CCE Asst மென்பொருளானது தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் முப்பருவக் கல்வி முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை போன்ற திட்டங்களின் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசியர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமையைக் குறைத்திடும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு ஆய்வுகளின் போது பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்பதால், அந்தந்த நிலையில் அச்சுப்படி எடுத்து பதிவேடுகளாக வைத்துக்கொள்ளும் வசதியோடு உருவாக்கப்பட்டுள்ளது.

கணிப்பொறி இயக்குதலிலும், தமிழ் தட்டச்சு முறையிலும் நிபுணத்துவம் ஏதும் தேவையின்றி சிறிய அளவில் பயிற்சி பெற்றவர்கள் கூட எளிதாக இயக்கிடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

CCE பதிவேடுகள் மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியானவை என்ற அடிப்படையில் DTERT நிறுவனம் வெளியிட்டுள்ளள வழிகாட்டுதல்களின்படி பதிவேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் வசதியாக பதிவேடுகளை நேரடியாக பிரிண்டருக்கு அனுப்பி பிரிண்ட் எடுக்காமல், ஆசிரியர்கள் பரவலாகப் பயன்படுத்தி வரும் MS Excel  மென்பொருளுக்கு பதிவேடுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஆசிரியர்கள் பதிவேடுகளில் கூடுதல் விவரங்கள் சேர்க்க விரும்பினாலோ அல்லது திருத்தங்கள் செய்ய விரும்பினாலோ செய்து கொள்ள முடியும். பதிவேடுகளை பிரிண்ட் எடுக்கமாலேயே சக ஆசிரியர்களுடனும், ஆய்வு அலுவலர்களுடனும் பகிர்ந்து கொள்ள முடியும்.                                                 

CCE தொடர்பான அனைத்து பதிவேடுகள் (பாட ஆசிரியர் பதிவேடு, வகுப்பாசிரியர் பதிவேடு) மட்டுமின்றி ஒவ்வொரு பருவ முடிவிலும் நடைபெறும் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு தொகுக்கப்படு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினரால் கோரப்படும் SLF III  போன்ற அறிக்கைகளையும் இம் மென்பொருள் வழங்குகிறது.

CCE முற்றிலும் கணிணிமயக்கப்பட்டது என்ற சூழலில் ஒரு கணிப்பொறியைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து வகுப்புக்களுக்கும் தேவையான பதிவேடுகளை எளிதில் பெற இயலும்.

No comments:

Post a Comment